வாலிபர் சுருண்டு விழுந்து சாவு

மானூர், ஜன. 18:   மானூர் அடுத்த கட்டப்புளியைச் சேர்ந்த வடிவேல் மகன் இலங்காமணி (42).  உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், ஒரு வாரமாக சரிவர உணவு உண்ணாமல் சுற்றித்திரிந்தார். நேற்று காலை மானூரில் இருந்து எட்டாங்குளம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையருகே நடந்து சென்ற போது திடீரென சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து உறவினர் முருகன் (28) கொடுத்த தகவலை அடுத்து மானூர் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், உடலை கைப்பற்றி  நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

Advertising
Advertising

Related Stories: