மனவளர்ச்சி குறைந்தோருக்கு புத்தாடை வழங்கல்

நெல்லை, ஜன. 18: பிரியங்கா காந்தி பிறந்தநாளையொட்டி நெல்லை கிழக்கு மாவட்ட பிரியங்கா காந்தி பேரவை சார்பில் மூன்றடைப்பு மனவளர்ச்சி குறைந்தோர் காப்பகத்தில் புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு  நெல்லை கிழக்கு மாவட்ட பிரியங்கா பேரவைத் தலைவர் பேரின்பபுரம் ஜெனிநாடார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொருளாளர் பால்ராஜ், மனவளர்ச்சி குறைந்தோருக்கு புத்தாடை, இனிப்பு வழங்கினார். மேலும் சுற்றுவட்டார ஏழைகளுக்கும் புத்தாடை வழங்கினார். விழாவில் மகிளா காங்கிரஸ் நிர்வாகி களக்காடு செல்வி, பேரின்பபுரம் தொழிலதிபர் செல்வின், மூன்றடைப்பு மேலூர் தொழிலதிபர் சில்வா, செங்குளம் ஆறுமுகம் மற்றும் காங்கிரசார், பிரியங்கா காந்தி பேரவையினர் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நெல்லை கிழக்கு மாவட்ட பிரியங்கா பேரவை தலைவர் பேரின்பபுரம் ஜெனி நாடார் செய்திருந்தார்.

Advertising
Advertising

Related Stories: