பங்களா சுரண்டையில் முப்பெரும் விழா

சுரண்டை, ஜன. 18: சுரண்டை  அடுத்த பங்களா சுரண்டையில் பேரன்புரூக் மேல்நிலைப் பள்ளி நிறுவனர் மிஷனரி பேரன்புரூக் இரு நூற்றாண்டு நிறைவு விழா, முன்னாள் மாணவர்கள் சங்க ஆண்டு விழா, பேரன் புரூக் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவுக்கு தாளாளர் தனபால் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் டாக்டர்கள் தங்கபாண்டியன், முருகையா, அருள்தாஸ் காந்தையா, கருப்பசாமி, தொழிலதிபர் கோதை எஸ் மாரியப்பன், ஆவுடையப்பன், சமுத்திரகனி, ராமகிருஷ்ணன், கேரள போலீஸ் துணை கமிஷனர் காளிராஜ் முகேஷ் குமார்,  பாலச்சந்திரன், வசந்தி ஜான்சிராணி முன்னிலை வகித்தனர். பள்ளி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் வில்சன் சாலமோன் ராஜ் ஜெபித்தார். திருமண்டல குருத்துவ செயலாளர் பீட்டர் தேவதாஸ் விழாவைத் துவக்கிவைத்தார். லண்டன் டிஎம்எஸ் மிஷனரி ஸ்தாபன டாக்டர் ஹக் ஸ்கில் பேரன்புரூக் வரலாற்று நூலை வெளியிட்டார். இதன் முதல்பிரதியை பள்ளி முன்னாள் மாணவர் பரன்குன்றாபுரம் என்டிஎஸ் சார்லஸ் பெற்றுக்கொண்டு பேசினார். விழாவில் டாக்டர்கள் முருகையா, முத்துலட்சுமி, விஜயன், ரவி, காஞ்சனா, ஜெயேந்திரா பள்ளி முதல்வர் ஞானமணி மற்றும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். இதையொட்டி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Related Stories: