ஊத்துமலையில் இன்று அருளப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நெல்லை, ஜன. 18: ஊத்துமலையில் அருளப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. பாளை மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் ஊத்துமலை அருளப்பர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. இதையொட்டி இன்று (18ம் தேதி) மாலை 6.30 மணிக்கு வாடியூர் பங்குதந்தை ஸ்டீபன் திருப்பலி நிறைவேற்றுகிறார். அன்பு வழி குடும்பம் என்னும் தலைப்பில் மறையுரை நடக்கிறது.  வரும் 20ம் தேதி நற்செய்தி பெருவிழா, கலைநிகழ்வுகள் நடைபெறும். வரும் 24ம் தேதி வெள்ளி விழா, பொன்விழா தம்பதியர் சிறப்பு செய்யப்படுகின்றனர். மறுநாள் (25ம் தேதி) நற்கருணை பவனி நடக்கிறது. 26ம் தேதி தேர்பவனி நடக்கிறது. 27ம் தேதியன்று பெருவிழா திருப்பலி, தேர்பவனி, சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.  மேலும் திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாதா பிரார்த்தனை, திருப்பலி நடக்கிறது. ஏற்பாடுகளை ஊத்துமலை பங்குத்தந்தை அருள் அந்தோனி சூசைராஜ் தலைமையில், அருட்சகோதரிகள், விழாக்குழுவினர், கிறிஸ்தவர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: