கோழி மாயமான விவகாரம் வீடு புகுந்து தந்தை, மகன் மீது தாக்குதல்

திருவேங்கடம், ஜன. 18: திருவேங்கடம் அருகே கோழி மாயமானதால் ஏற்பட்ட மோதலில் தந்தை, மகன் தாக்கப்பட்டனர். திருவேங்கடம் அருகேயுள்ள உமையதலைவன்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த  கிருஷ்ணன் மகன் சின்னத்துரை (46) டிராக்டர் டிரைவரான இவர் கோவில்பட்டியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்னலட்சுமி(40) மகன் சங்கரலிங்கம் (19). பொங்கல் பண்டிகையையொட்டி சின்னத்துரை ஊருக்கு வந்திருந்தார். இதனிடைேய அவரது வீட்டில் வளர்த்து வரும் கோழி திருட்டு போனது. பக்கத்து வீட்டை சேர்ந்த வைரமுத்து மனைவி முருகலட்சுமி(40) மீது சந்தேகம் ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னத்துரை, அவரது மகன் சங்கரலிங்கம் ஆகியோர் வைரமுத்து வீட்டிற்கு சென்று கோழி திருடு போனது தொடர்பாக கேட்டபோது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வைரமுத்து, அவரது மனைவி முருகலட்சுமி, மகன்கள் அன்பரசன்(20), அழகரசன்(19), அருள்செல்வன்(18) ஆகிய 5 பேரும் வீடு புகுந்து சின்னத்துரை, சங்கரலிங்கம் ஆகியோரை தாக்கினர். காயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின்பேரில் திருவேங்கடம் எஸ்.ஐ. அய்யனார் வழக்குப் பதிந்து அன்பரசனை கைது செய்தார். மற்ற 4 பேரையும் தேடி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: