ரயில் மோதி வாலிபர் பலி

திருப்பூர், ஜன.18: திருப்பூரில், ரயில்மோதி அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தார். திருப்பூர், ஊத்துக்குளி ரோடு முதல் ரயில்வே கேட் அருகே, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வாலிபர் உடலை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, வாலிபர் ரயில் மோதி பலியானதாக தெரியவந்தது. மேலும், உயிரிழந்த வாலிபர், சிவப்புநிற கட்டம் போட்ட சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். அவர், அருகே கிடந்த ஆதார் கார்டை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்தனர். அதில், அவர் பெயர் செந்தில், முத்தணம்பாளையத்தை சேர்ந்தவர் என குறிப்பிட்டிருந்தது.இதையடுத்து, அந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த முகவரியில் வாடகைக்கு தங்கி இருந்ததும், தற்போது வேறு இடத்திற்கு சென்று விட்டதாகவும் தெரியவந்தது. மேலும், ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: