அவிநாசியில் திருவள்ளுவர் நாள் விழா

அவிநாசி,ஜன.18: திருவள்ளுவர் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளுவர்நாள் விழா அவிநாசியில் கங்கவார் திருமண மண்டபத்தில் நேற்று  கொண்டாடப்பட்டது.விழாவில் அறக்கட்டளை தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் குமாரராஜா, அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சாந்திபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தமிழ்வேள் வரவேற்றார். முன்னதாக அறக்கட்டளை செயலாளர் அங்கமுத்து தலைமையில் அவிநாசியில் முக்கிய தெருக்களின் வழியாக திருவள்ளுவர் திருத்தேர் நகர்வலமாக வந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: