மடத்துக்குளம்அரசு மருத்துவமனையில் பணிக்கு வராத டாக்டர்கள்

உடுமலை, ஜன. 18: மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் பேரூராட்சி திமுக செயலாளர் பாலமுரளி, திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:மடத்துக்குளத்தில்  சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு  மருத்துவமனையில், கடந்த 2 ஆண்டுகளாகவே டாக்டர்கள் சரிவர பணிக்கு  வருவதில்லை. நோயாளிகள் எப்போது வந்தாலும், டாக்டர் இப்போதுதான் டூட்டி  முடித்து சென்றார் என்கின்றனர். இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால்,  அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உடுமலை அல்லது கோவைக்கு செல்ல வேண்டிய  நிலைமை உள்ளது.

தமிழக முதல்வரால்  சமீபத்தில் புதிதாக திறக்கப்பட்ட  கட்டிடம் மற்றும் மருத்துவ அரங்கு காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது.

இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மடத்துக்குளம்  அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் எப்போதும் பணியில் இருக்க உத்தரவிட  வேண்டும். இதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: