கோவையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் திருப்பதியில் மீட்பு

கோவை, ஜன.18: கோவை அருகே நகைக்கடை காரில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.ஒரு கோடி மதிப்பிலான நகைகள் திருப்பதியில் மீட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, கோவை போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கேரளா திருச்சூரில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ஒரு பிரபல நகைக்கடைக்கு சொந்தமான ரூ.ஒரு கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைககள் காரில் கொண்டு வந்தபோது, கோவை அருகே கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இக்கொள்ளையில் தொடர்பாக 2 பேர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர். 9 பேரை கோவை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இதில் தொடர்புடைய பைரோஸ்கான் திருப்பதியில் நகைகளுடன் பதுங்கியுள்ளதாக தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவரை ஆந்திரா போலீசார் கடந்த 12ம் தேதி அவரை பிடித்தனர். பின்னர் நகைககளை பறிமுதல் செய்து திருப்பதி திருமலை போலீசில் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து, கோவை தனிப்படை போலீசார் திருப்பதி திருமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பைரோஸ்கான் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வந்தனர். நகை மற்றும் பைரோஸ்கானை ஒப்படைக்கும்படி கூறியுள்ளனர். அதன்படி திருப்பதி திருமலை போலீசார் இன்று நகை மற்றும் குற்றவாளிகளை ஒப்படைக்க உள்ளனர். அவர்களை கோவை கொண்டு வந்து விசாரணை நடத்த உள்ளனர். அதன் மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Related Stories: