கோவை அரசு அலுவலகங்களில் பெயரளவில் தமிழ் பயன்பாடு

கோவை,ஜன.18:  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், அலுவலக கோப்புகள் அனைத்தும், தமிழ் மொழியில் தான் எழுதப்பட வேண்டும், அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளை பயன்படுத்தக் கூடாது எனவும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பெரும்பாலான அரசு அலுவலகங்களில், ஆங்கில வார்த்தைகளே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதை தவிர்க்கவும், தமிழ் மொழியின் பயன்பாட்டை முழு அளவில் புகுத்தும் நோக்கிலும் அலுவலக ரீதியாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அவ்வப்போது ஆய்வு நடத்தப்படும். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அரசு அலுவலர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை ஆட்சி மொழி பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து அலுவலகங்களில் இருந்தும் அதிகாரிகள் கலந்து கொள்வர்.இதில், கோப்புகளை தமிழில் தயாரிப்பது எப்படி, அலுவலக பணிகளில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க செய்யும் வழிமுறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படும். இப்பயிற்சியில் பங்கேற்கும் அரசு அலுவலர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி பயன்பாடு குறைவாகவே உள்ளது. இந்த விஷயத்தில், மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் செயல்பாடு பெயரளவில் உள்ளது. இது தொடர்பான, கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் முறையாக நடத்தப்படுவதில்லை என அரசுத்துறை அலுவலர்களும், தமிழ் ஆர்வலர்களும் புகார் தெரிவிக்
கின்றனர்.
× RELATED தமிழகம் முழுவதும் 21...