சோமனூரில் இருந்து முருக பக்தர்கள் காவடியுடன் பழனிக்கு பாதயாத்திரை

சோமனூர்,ஜன.18: தைப்பூசதேர் திருவிழாவை முன்னிட்டு சோமனூரில் இருந்து முருகபக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்ஆண்டுதோறும் தைப்பூச தேர்திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு கோவை,திருப்பூர்,ஈரோடு,சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாதயாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.சோமனூர் பகுதியிலிருந்தும் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் மூன்று நாள்  பாத யாத்திரையாக பழனி  சென்று தைப்பூச விழாவை சிறப்பிக்கின்றனர். இந்த ஆண்டு தைபூச தேர்த்திருவிழா வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.
நேற்று காலை சோமனூர் பகுதியிலிருந்து முருக பக்தர்கள் பல்வேறு குழுக்களாக காவடியுடன் பாதயாத்திரை புறப்பட்டனர். சோமனூர், ஊஞ்சப்பாளையம், இந்திராநகர், கணியூர், கிட்டாம்பாளையம், கருமத்தம்பட்டி, எலச்சிபாளையம், சாமளாபுரம், உள்ளிட்ட பகுதியில் இருந்து ஒவ்வொரு குழுவிற்கும் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு பழனிக்கு புறப்பட்டனர். பாதயாத்திரையின் போது வழியில் களைப்பு தெரியாமல் இருக்க, வழி எங்கும் காவடி
ஆட்டம் ஆடியபடி செல்கின்றனர்.× RELATED வேளிமலை குமாரகோவிலில் முருகன்- வள்ளி...