மது விற்ற 61 பேர் கைது

கோவை, ஜன.18: கோவை நகரில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிலர் முறைகேடாக மதுபானம் விற்பனை செய்வதாக தகவல் வெளியானது. நகர போலீசார் சோதனையில் ஒரே நாளில் 26 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட், சுங்கம் பைபாஸ் ரோடு, செல்வபுரம் பைபாஸ் ரோடு, அம்மன் குளம் உள்ளிட்ட பகுதியில் மது விற்ற கும்பல் சிக்கியது. இவர்களிடமிருந்து 391 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் புறநகரில் மது விற்ற 35 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் 580 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் மது விற்ற 61 பேர் கைது செய்யப்பட்டு, 971 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: