எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

அன்னூர்,ஜன.18:அன்னூரில் நேற்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.அன்னூர் நகர அதிமுக சார்பில் பயணியர் மாளிகை முன்பாக எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அதிமுவினர் மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் செளகத் அலி தலைமையில் வார்டு நிர்வாகிகள் அமுல் கந்தசாமி,அம்பாள்பழனிச்சாமி,சாய்செந்தில்,பிரபு,வெங்கிடுபதி, கந்தசாமி,முருகேசன்,செந்தில்,மூர்த்தி, ஈஸ்வர மூர்த்தி,வெல்கோ சண்முகம், முத்து,கருப்புசாமி,குப்புசாமி,ரவீந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

× RELATED கருணாநிதி பிறந்தநாள் விழா: 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்