காங். நிர்வாகிகள் கூட்டம்

தொண்டாமுத்தூர், ஜன 18: கோவை அருகே தொண்டாமுத்தூர் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் ஆலாந்துறையில் நடந்தது. வட்டார தலைவர் பேரூர் மயில் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராஜ்குமார் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் எம்.என்.கநதசாமி, மாவட்ட தலைவர் விஎம்சி.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நவீன்ர, ஆகாஷ், மாரியப்பன், தங்கதுரை, விஜயகுமார், கோவை அனீபா, வெள்ளிங்கிரி, சதீஷ், வெங்கிடாசலம், பாலு, ஆறுச்சாமி, ரங்கசாமி, விஜயகுமார், பில்தாஸ், சின்னசாமி, பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 100 பூத்தில் தலா 10 பேர் தேர்வு செய்வது, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அரசு தடை செய்துள்ள 3 நம்பர் லாட்டரியை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க கோருவது, டாஸ்மாக்கில் கள்ள சந்தையில் மது பானத்தை விற்கும் பார் உரிமையாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோருவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: