பிப்ரவரி 15ம் தேதி வரை பனி நீடிக்க வாய்ப்பு

கோவை. ஜன.18; கோவையில் தற்போது நீடித்து வரும் பனியின் தாக்கம் வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், பயிர்களில் நோயின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் கூறுகையில், ’’கோவையில் பகல் நேர வெப்பநிலையானது 29.5 டிகிரி செல்சியஸ் வரையிலும் இரவு நேர வெப்ப நிலையானது 14.5 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகி வருகிறது. பனி காலங்களில் பயிரிட உகந்த பயிர்களான கொள்ளூ, பனி பயிர், கொண்டகடலை போன்றவை அதிக விளைச்சல்களை தரும்.அதே சமயம் திரட்சை, மஞ்சள், கரும்பு, வாழை போன்றவைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுவது அவசியம். பிப்ரவரி 15ம் தேதி வரை பனி தாக்கம் இருக்கும். கடந்த ஆண்டினை காட்டிலும் இந்தாண்டு பனியின் தாக்கம் அதிகமாவே காணப்படுகிறது கால்நடைகளை காலை 10.30 மணிக்கு மேல் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது நல்லது. தண்ணீர் அதிகமாக பனி காலத்தில் கால்நடைகள் குடிக்க விரும்பாது ஆகையால் அடர் தீவனங்கள் அதிகமாக வைக்க வேண்டும்.
Advertising
Advertising

ஜனவரி மாதம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புள்ளது ஆகையால் மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு,’’ என்றார்.

Related Stories: