×

வனத்துறை சார்பில் வனப்பொங்கல் விழா

சத்தியமங்கலம், ஜன.18: வனத்துறை சார்பில் தாளவாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனப்பொங்கல் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனத்துறை சார்பில் வனப்பொங்கல் விழா கொண்டாடும்படி புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நாகநாதன் உத்தரவிட்டார்.  இதையடுத்து தாளவாடி மலைப்பகுதியில் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனகிராமங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  இதில், பொங்கல் வைத்தும், கிராமங்களில் வண்ண கோலமிட்டும், விளையாட்டுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பது குறித்த உறுதி மொழி எடுக்கப்பட்டது. விழாவில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்புக்காவலர்கள் என அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.  இதேபோல், சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், கேர்மாளம் வனச்சரகங்களில் உள்ள வனகிராமங்களில் அந்தந்த வனச்சரக அலுவலர்கள் தலைமையில் வனப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டதாக புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர்கள் அருண்லால்,  குமுளி வெங்கட அல்லப்ப நாயுடு ஆகியோர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு