மது விற்ற 19 பேர் கைது

ஈரோடு, ஜன.18: ஈரோடு மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று முன்தினம் (16ம் தேதி) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து, மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் உத்தரவிட்டார்.

அதன்படி, போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், சட்ட விரோதமாக மது பதுக்கி விற்றதாக 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 147 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertising
Advertising

Related Stories: