வீட்டை சேதப்படுத்திய யானை

பந்தலூர், ஜன.18 :  பந்தலூரை அடுத்த பிதர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட விலங்கூர் குழிமூலா ஆதிவாசி காலனியில் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஒற்றை காட்டு யானை, வெள்ளச்சி என்பவரின் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது.   

இந்த ஒற்றை யானை கடந்த சில நாட்களாகவே நெலாக்கோட்டை, பாக்கனா,ராக்வுட் போன்ற  பகுதிகளில் உள்ள குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவதுடன், விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. முன்னதாக  யானை தாக்கி சேதமடைந்த வெள்ளச்சியின் வீட்டை ஆய்வு செய்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட வெள்ளச்சிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் வலியுறுத்தினர்.
Advertising
Advertising

Related Stories: