திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட்டம்

தா.பேட்டை,   ஜன.18:  தா.பேட்டையில் தை முதல்நாளை தமிழ்புத்தாண்டாக திமுகவினர்  கொண்டாடினர். திமுக நகர செயலாளர் தக்காளி தங்கராசு தலைமை வகித்தார். மாவட்ட  துணை செயலாளர் மயில்வாகனன், நிர்வாகிகள் சிவா, செல்வம் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். விழாவையொட்டி திமுக கட்சி கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கும்,  தொண்டர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. இதேபோல் முசிறி,  தொட்டியம் பகுதிகளிலும் திமுக வினர் கட்சி கொடியேற்றி தமிழ்ப்புத்தாண்டை  கொண்டாடினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

× RELATED அதிமுக சார்பில் மேட்டூர் ஆஞ்சநேயர் கோயிலில் யாகம்