பொங்கல் விழா

மண்ணச்சநல்லூர், ஜன.18:  மண்ணச்சநல்லூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் சார்பில் பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் ஒன்றாக சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். துப்புரவு பணியாளர்கள் குடும்பத்திற்கு முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்ராஜ் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கினார்.  பொங்கல் விழாவில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், குடும்பத்தினர் பங்கேற்ற நடனபோட்டி, பாட்டு போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: