எஸ்டிபிஐ சார்பில் பாபர்மசூதி வரலாற்று கண்காட்சி

திருச்சி, ஜன.18: திருச்சியில் பாபர்மசூதி வரலாற்று கண்காட்சி எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சி சார்பாக பாபர் மசூதியை மீட்போம், இந்தியாவை மீட்போம் என்ற தலைப்பில் பாபர் மசூதி வரலாற்று கண்காட்சி நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் மார்க்கெட் தஞ்சை ரோடு பள்ளிவாசல் அருகில் உள்ள மண்டபத்தில் பாபர் மசூதி வரலாற்று கண்காட்சி நேற்றுமுன்தினம்  நடைபெற்றது. கண்காட்சியை மாநில செயற்குழு உறுப்பினர் சபியுல்லா திறந்து வைத்தார். திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் இமாம் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட பொது செயலாளர் நியமத்துல்லா, மாவட்ட செயலாளர்  ரபிக், மாவட்ட துணை தலைவர் ரஹிம், மாவட்ட பொருளாளர் பிச்சைகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் விழிப்புணர்வு பிரசாரமும் நடந்தது.
Advertising
Advertising

Related Stories: