×

தோட்டக்கலைத்துறை அழைப்பு

திருச்சி, ஜன.18: நுண்ணீர்பாசனம் மற்றும் இதர தி்ட்டத்தில் சேர்ந்து பயன்பெற திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.திருச்சி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் 8,303 எக்டேர் பரப்பிலும், பழப்பயிர்கள் 10,255 எக்டேர் பரப்பிலும், நறுமணப்பயிர்கள் 1,454 எக்டேரிலும், மலர்ச்செடிகள் 932 எக்டரிலும் பயிரிடப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பரப்பு அதிகரித்தல் இனத்தின் கீழ் பழமரக்கன்றுகள், வாழைக்கட்டைகள், திசுவளர்ப்பு வாழை, பூச்செடிகள், காய்கறி நாற்றுகள், நறுமணப்பயிர்கள் சாகுபடி செய்யவும், நிலப்போர்வை, சிப்பம் கட்டும் அறை, பாதுகாக்கப்பட்ட முறையில் சாகுபடி செய்வதற்கு நிழல்வலை கூடாரம், பசுமைக்குடில் அமைக்க, வேளாண் இயந்திரங்கள், மகசூலை அதிகரிக்க மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்கும் பொருட்டு தேனீப்பட்டிகள் வழங்குவதற்கும் ரூ.3.12 கோடிக்கு இலக்குகள் பெறப்பட்டு, உழவன் செயலி மூலம் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது.தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 2018-19ம் ஆண்டுக்கு 78.59 லட்சம் ரூபாய் நிதி பெறப்பட்டு, பரப்பு அதிகரித்தல் இனத்தின்கீழ் கொய்யா பதியன்கள், வெங்காய பரப்பு விரிவாக்கம் மற்றும் வெங்காய சேமிப்புக் கிடங்கு ஆகிய திட்டங்களுக்கு பயனாளிகள் உழவன் செயலி மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. 2018-19ம் ஆண்டு காரீப் பருவம் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்து–்ககு 5,169 எக்டேர் பரப்பு கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெற இலக்கு பெறப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்வதற்கு 191 கிராமங்கள் மற்றும் 4 பயிர்கள் (வாழை, வெங்காயம், மரவள்ளி, மஞ்சள்) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறலாம்.  நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் 1,723 எக்டேர் இலக்கிற்கு 13.70 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இணையத்தில் பதிவு செய்து பணி நடக்கிறது. நுண்ணீர் பாசனம் மற்றும் இதர திட்டங்களில் பயன்பெற வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பதிவு செய்து விவசாயிகள் பயனடைய தோட்டக்கலைத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ