102வது பிறந்தநாள் விழா எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக உள்பட கட்சியினர் மரியாதை

திருச்சி, ஜன. 18: தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி கன்டோன்மென்ட் கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் குமார் எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், அண்ணா திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் கணேஷ் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertising
Advertising

Related Stories: