மஞ்சுவிரட்டு மாடுவிடுவதில் தகராறு 4 பேர்

காயம்லால்குடி, ஜன.18: லால்குடி அடுத்த திண்ணியம் கிராமத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மதியம் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சி துவங்கியதும் முதலாவதாக கோயில் மாடு அவிழ்த்து விடுவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை எழுந்துள்ளது. அதனைத்தொடர்ந்து வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் திண்ணியம் காளியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த  வரதராஜன் மகன் ஆனந்த் (30), அங்குராஜ் மகன் மணிகண்டன் (28), பழனிச்சாமி மகன் வெற்றிவேல் (28) ஆகிய மூன்று பேர் லேசான காயங்களுடன் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த மதியழகன் மகன் ராஜ்குமார்  (24)  என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

× RELATED முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது