பொங்கல் முடிந்து ஊர் திரும்பியதால் மத்திய பஸ்நிலையத்தில் மக்கள் கூட்டம் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து சென்றது

திருச்சி, ஜன.18: பொங்கல் விடுமுறை முடிந்து ஊர்களுக்கு திரும்பியதால் திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் விடுமுறை கடந்த 14ம் தேதி போகி பண்டிகையுடன் துவங்கியது. முன்னதாக 12, 13 ம்தேதி (சனி, ஞாயிறு) அரசு விடுமுறையாகும். 15ம்தேதி பொங்கல், 16ம்தேதி திருவள்ளுவர் தினம், 17ம் தேதி காணும்பொங்கல் விடுமுறை என பொங்கல் விடுமுறை ஆறு நாட்கள் ஆனது. இந்நிலையில் 18ம்தேதியும் (வெள்ளி), 19ம்தேதியும் (சனிக்கிழமை)  ஆகிய இரு நாட்கள் வேலை நாட்களாக இருந்தாலும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் உள்பட பல்வேறு பள்ளிகளுக்கும் மற்றும் அரசு பணிகள் இன்று(18ம் தேதி) வேலை நாள் ஆகும். பள்ளிகளுக்கு வேலை நாட்கள் என்பதால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு வழக்கமான வேலை என்பதால் பணியிடங்களுக்கு திரும்பினர். இதனால் வழக்கமாக அனைத்து பஸ் நிலையங்களிலும் நேற்றிரவு  முதல் கூட்டம் அலை மோதியது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று இரவு முதல் பயணிகள் குவிந்தனர்.இதனால் மத்திய பஸ் நிலையத்தில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் நெரிசலை சீர்படுத்தினாலும், கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் தொடர்ந்து 3 நாட்களும்  போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் கூடுதல் காவலர்களை நியமித்து எவ்வித பிரச்னை இன்றி போக்குவரத்து சீர்பட வேண்டும் என்பதே பயணிகளின் வேண்டுகோள்.

Related Stories: