×

திருத்துறைப்பூண்டியில் பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன்

திருத்துறைப்பூண்டி, ஜன.18:  திருத்துறைப்பூண்டியில் சுற்றுச்சுவர் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்புமின்றி ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன் திறந்து கிடக்கிறது. திருவாரூர்  மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ஊராட்சி  ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தில் 1936 ஆண்டு முதல் நாராயணப்பர் பயணிகள்  தங்கும் விடுதி  50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி  வந்தது. இதனருகில் ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள் இருந்ததாலும், வேறு  எங்கும் தங்கும் விடுதி இல்லாத காரணத்தினாலும் பல்வேறு அரசியல் கட்சி  தலைவர்கள், அதிகாரிகள்  இங்குதான் தங்குவார்கள். பின்னர் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும்போது இந்த இடத்தில் ஊராட்சி  ஒன்றிய அலுவலகம் இயங்கி வந்தது. இந்த வளாகத்திலேயே ஊராட்சி ஒன்றிய சிமெண்ட்  குடோன் உள்ளது. பின்னர் புதிய கட்டிடம் கட்டப்பட்ட கட்டிடத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது.  தற்போது நாராயணப்பர் பயணிகள் தங்கும் விடுதியில் மேல்தளத்தில் ஒருங்கிணைந்த  ஊட்டசத்து அலுவலகம் இயங்கி வருகிறது.  இந்த வளாகம் நான்கு புறமும் திறந்து  கிடக்கிறது. முன்பக்கம் கேட் பல ஆண்டுகளாக மூடுவது கிடையாது. பின்பக்கம்  சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வளாகத்தில் அரசால் வீடு கட்ட சிமெண்ட் வழங்கப்படுவதற்கு  குடோன் உள்ளது. இந்த சிமெண்ட் குடோனிற்கு மட்டும் பூட்டும் வசதியுள்ளது.  வீடுகளுக்கு வழங்கப்படும் கம்பிகள் எல்லாம் திறந்தவெளியில்தான் கிடக்கிறது.  தற்போது தற்காலிக காவலர் இரும்பு குடோனுக்கு மட்டும்தான் பணியில் உள்ளார்.  இந்நிலையில் இந்த வளாகத்தில் என்ன நடக்கிறது. கம்பிகள் இருப்பு என்ன  என்று அவ்வளவு சீக்கிரமாக அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியாது.   எனவே அரசு  சொத்துக்களை பாதுகாப்பதற்கு நான்கு புறமும் சுற்றுச்சுவர் அமைத்து  முன்பக்கம் உடைந்த கேட்டினை மீண்டும் சரி செய்திட வேண்டுமென்று பொதுமக்கள்  மற்றும் சமூக ஆர்வலர்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Panchayat Union ,
× RELATED புதுப்பட்டி ஊராட்சியில் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி