×

டிடிவி. தினகரன் வலியுறுத்தல்

திருவாரூர், ஜன.18:    கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீதான புகாரினை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 102வது பிறந்தநாளையொட்டி திருவாரூர் புதுத் தெருவில் உள்ள அவரது சிலைக்கு நேற்று மாலை அணிவித்த பின்னர் நிருபர்களிடம் தினகரன் கூறியதாவது, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் பல்வேறு விவரங்களை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்த இறப்பு என்பது சந்தேக மரணமாக உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் முதல்வருக்கு தொடர்புடையதாக வெளிவரும் தகவல்களையடுத்து அவருக்கு தற்போது மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேர்களை டெல்லியில் தமிழக போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ள சம்பவம் தமிழக அரசுக்கு ஏற்ப்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகும். மேலும் முதல்வர் மீதான இந்த புகாரினை சென்னை உயர்நீதிமன்றம் மூத்த நீதிபதி ஒருவரை கொண்டு கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும் தமிழக நலனில் தேசிய கட்சிகள் அக்கரை கொள்ளவில்லை என்பதால் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ அல்லது தனியாகவோ வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளோம். இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.  மேலும் அதிமுக சார்பில் நேற்று புதுத் தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அறிவிக்கப்பட்ட நிலையில் இதனையடுத்து 2வதாக தினகரன் மாலை அணிவித்தார்.

Tags : Dinakaran ,
× RELATED இருப்பவல் திருப்புகழ்