கள்ளசாராய விற்பனைக்கு எதிர்ப்பு சாலையின் குறுக்கே கருப்பு கொடி வேட்டங்குடி மக்கள் ஆவேசம்

கொள்ளிடம், ஜன.18: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடியில் உள்ள ஒரு தெருவில் உள்ள சிலர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஊர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் விஏஓ அலுவலகம் எதிரில் சாலையின் குறுக்கே கடந்த சில தினங்களுக்கு முன் சாராய பாட்டில்களுடன் கருப்பு துணியும் கட்டி தொங்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் அதிரடியாக சாராயம் விற்பனை செய்த நபர்களை கைது செய்தனர். பின்னர் ஒரு வார காலம் சாராய விற்பனை நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு மீண்டும் கடந்த சில நாட்களாக வேட்டங்குடியில் உள்ள ஒரு தெருவில் மட்டும் பகிரங்கமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நேற்று ஊர் பொதுமக்கள் சார்பில் வேட்டங்குடி பிரதான சாலையின் குறுக்கே கருப்பு கொடியுடன் சாராய பாட்டில்களையும் கட்டி தொங்கவிட்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

Related Stories: