காணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்

கும்பகோணம், ஜன.18: காணும் பொங்கலையொட்டி கும்பகோணத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தது. அதன்படி மேலக்காவிரியில் நடந்த விளையாட்டு போட்டிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன் துவக்கி வைத்தார். இதில் பானை உடைத்தல், இசை நாற்காலி, கபடி, சிலம்பம், கோலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கும்பகோணம் பாணாதுறையில் நடந்த பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. போட்டியை அமமுக நகர செயலாளர் குருமூர்த்தி துவக்கி வைத்தார். போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆதிலட்சுமி ராமமூர்த்தி வழங்கினார். கும்பகோணம் பொன்னுசாமி நகரில் பொதுநல மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மன்ற தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். பின்னர் திருக்குறள் ஒப்புவித்தல், ஓட்டப்பந்தயம், மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி, உறியடித்தல் போட்டிகள் நடந்தது. இதில் 100க்கும்  மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: