சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடங்களில் ஜன்னல் அமைக்காவிட்டால் போராட்டம் மாவட்ட கல்வி அலுவலருக்கு மனு

கும்பகோணம், ஜன.18: சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டிடங்களில் ஜன்னல்கள் அமைக்காவிட்டால் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலருக்கு மனு

அளிக்கப்பட்டது.கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலரிடம் தமிழ் தேசிய பாதுகாப்பு சங்க ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன் கோரிக்கை மனு அளித்தார். அதில் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டாமலும், வகுப்பறையில் ஜன்னல்களை அமைக்காமல் இருந்து வருகிறது. இதனால் பள்ளி விடுமுறை நாட்களிலும், இரவு நேரங்களில் மது அருந்தும் பாராகவும் மாறி விடுகிறது. மேலும் பள்ளிக்குள் இருக்கும் கழிப்பறை, குடிநீர் குழாய்களை மர்மநபர்கள் உடைத்து வருகின்றனர். இதுகுறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே மாவட்ட கல்வி அலுவலர் உடனடியாக பார்வையிட்டு சோழபுரம் மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவரும், வகுப்பறைக்கு ஜன்னல்களையும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் 21ம் தேதி கும்பகோணம் பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவு பூங்கா முன் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: