தி காவிரி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சேலம், ஜன.18: சேலம் தி காவிரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழர் பண்பாட்டை நினைவூட்டும் வகையில், பாரம்பரிய உடையணிந்து வந்த மாணவிகள், பல வண்ணங்களில் கோலமிட்டு பொங்கல் வைத்தனர். தொடர்ந்து நாட்டுப்புற கலைகள் நடத்தப்பட்டு, மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும், கிராமிய விளையாட்டு ேபாட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில், கல்வி நிறுவனங்களின் தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் மதன்கார்த்திக், செயலாளர் இளங்ேகாவன், தாளாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், டீன் ஒபுளி மற்றும் முதல்வர் செல்வக்குமார், உதவி பேராசிரியர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
Advertising
Advertising

Related Stories: