துக்காம்பாளைய தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

கும்பகோணம், ஜன. 18:  கும்பகோணம் துக்காம்பாளைய தெருவில் பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து சாலையில் கழிவுநீர் வழிந்ேதாடுவதால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கும்பகோணம் துக்காம்பாளையத்தெரு ஓம்சக்திசாகிப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை மேன்ஹோல் தொட்டி சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தி அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைந்து கழிவுநீர் வெளியேறுவது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதாள சாக்கடை குழாய் அடைத்து கொண்டு கழிவுநீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் இந்த பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடை மேன்ஹோல் உடைவதும் அதை அவ்வப்போது தொழிலாளர்கள் சரி செய்வதுமாக உள்ளனர். தற்போது உடைந்துள்ள மேன்ஹோலை தொழிலாளர்கள் சரி செய்யாமல் உள்ளனர். எனவே கும்பகோணம் துக்காம்பாளையத்தெரு புதுப்பேட்டை பகுதியில் பாதாள சாக்கடை மேன்ஹோல் தொட்டி நிரம்பி சாலையில் ஓடுவதை நிறுத்த நிரந்தமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: