வீரவன்னியர் பேரவை முப்பெரும் விழா

சேலம், ஜன.18: வீரவன்னியர் பேரவை சார்பில் பொங்கல் விழா மற்றும் 20ம் ஆண்டு விழா 5 ரோட்டில் உள்ள பேரவை  அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு மத்திய, மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமை வகித்தார். தலைவர் கண்ணன் வரவேற்றார். மாநில இளைஞர் பேரவை செயலாளர் சக்திவேலன் கலந்து கொண்டு பொங்கல் வைபவத்தை தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து இரண்டு பானைகளில் பொங்கலிட்டனர். பசு மாடு, கன்றுக்குட்டிக்கு பொங்கல் வைத்தனர்.

இதில் துணை செயலாளர் ஆறுமுகம், வடக்கு மாவட்ட தலைவர் மகேந்திரன், நிர்வாகிகள் கண்ணன், மனோகரன், வாசுதேவன், ராஜா, மணி, ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
Advertising
Advertising

Related Stories: