அதிமுக., அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

ஆத்தூர், ஜன.18: சேலம் மாவட்டத்தில் அதிமுக., மற்றும் அமமுக சார்பில் எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஆத்தூரில் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 102வது பிறந்த நாள் விழா, மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. முன்னதாக அதிமுகவினர் ஊர்வலமாக சென்று சாரதா ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ சின்னதம்பி, மாவட்ட துணை செயலாளர் அர்சுனன், நகர செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் தென்னரசு, நூர்முகமது. கல்லை. பெரியசாமி, ராமதாஸ், வேல்முருகன், துரைசாமி, வெங்கடேசன், ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஓமலூர்: சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், தாரமங்கலத்தில் நடந்த எம்ஜிஆர்  பிறந்தநாள் விழாவுக்கு, ஒன்றிய செயலாளர் சின்னுசாமி தலைமை வகித்தார். இதில்  எம்எல்ஏக்கள் சங்ககிரி ராஜா, வீரபாண்டி மனோன்மணி, ஓமலூர் வெற்றிவேல்,  முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Advertising
Advertising

இடைப்பாடி: இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில், நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ராமன், முன்னாள் கவுன்சிலர்கள் முருகன், ரேவதி, சரவணன், சேகர், தனம், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கொங்கணாபுரத்தில் ஒன்றிய குழு தலைவர் கரட்டூர் மணி தலைமையில், கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர். இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், நிர்வாகிகள் பழனிசாமி, மாணிக்கம், சாந்தி செந்தில்குமார், பழனிசாமி, ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், உடையார்பாளையத்தில் நகர  செயலாளர் ராஜேந்திர குமார் தலைமையில், எம்ஜிஆர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்தனர். தாரமங்கலத்தில் ஒன்றிய செயலாளர் தங்கவேல் தலைமையில், மாநில அமைப்பு  செயலாளர் எஸ்.கே. செல்வம், மேற்கு மாவட்ட  செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர், எம்ஜிஆர் சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: