×

அகில இந்திய அளவிலான கபடி போட்டி கோலாகலம்

திருச்செங்கோடு, ஜன.18:  திருச்செங்கோட்டில் நடைபெற்று வரும் அகில இந்திய கபடி போட்டியில் இன்று இறுதி ஆட்டத்தில் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.தைப்பொங்கலை முன்னிட்டு தைப்பொங்கல் விழா குழு மற்றும் திருச்செங்கோடு ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து,  46வது அகில இந்திய ஏ கிரேடு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டிகளை நடத்தி வருகிறது. திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில், கடந்த 15ம் தேதி முதல் மின்னொளியில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், நாடு முழுவதிலுமிருந்து 38 ஆண், பெண் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 3ம் நாளான நேற்று மாலை நடந்த போட்டிகளை முன்னாள் மத்திய இணை அமைச்சரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான காந்திசெல்வன், மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், நகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆண்களுக்கான போட்டியை முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இன்று(18ம் தேதி) வெள்ளிக்கிழமை மாலை இறுதிப்போட்டிகளும், அதை தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.

Tags : India ,kabaddi tournaments ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...