×

ராசிபுரம் அருகே இளைஞர் காங்கிரஸ்ஆலோசனை கூட்டம்

ராசிபுரம், ஜன.18: ராசிபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம், போடிநாய்க்கன்பட்டியில் நேற்று நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெபிமேத்தர், தலைவர் ஹாசன்மௌலானா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். இதில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை, தற்போதைய மத்திய அரசு முடக்கியுள்ளது குறித்து விரிவாக பேசினர். கூட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் சீனிவாசன், ராசிபுரம் நகர தலைவர் முரளி, சண்முகம், வட்டார தலைவர் கணேசன், மணி கோபால், சிவக்குமார், மாணிக்கம், வெங்கடேஷ், கார்த்தி, வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Youth Congress ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து