பொன்னமராவதியிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை

பொன்னமராவதி, ஜன.18: பொன்னமராவதியில் உள்ள வலையபட்டி மலையாண்டி கோயிலில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து பழனி பாதயாத்திரை புறப்பட்டனர்.  பொன்னமராவதி பாலமுருகன் கோயில் பழனி பாதயாத்திரைக்குழு சார்பில் பஜனை பாடி, அன்னதானம் வழங்கினர். இதனை தொடர்ந்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். வலையபட்டி மலையாண்டி கோயிலில் இருந்து காவடிகள் எடுத்து பாதயாத்திரை புறப்பட்டனர்.
இதேபோல கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், கொன்னைப்பட்டி, திருக்களம்பூர், மேலைச்சிவபுரி, கண்டியாநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.

× RELATED மேலைச்சிவபுரி விஏஓ அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா