×

பொட்டிரெட்டிப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிபாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு

நாமக்கல், ஜன.18: சேந்தமங்கலம் அருகே, நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.சேந்தமங்கலம் தாலுகா பொட்டிரெட்டிப்பட்டியில், நாளை(19ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல், போட்டி நடப்பதை கண்காணிக்க வசதியாக தனியாக அமைக்கப்பட்டுள்ள உயரமான மேடை, போட்டி நடக்கும் மைதானம் போன்றவற்றை, கலெக்டர் ஆசியாமரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஜல்லிக்கட்டின் போது காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்க வரும் மருத்துவர்களுக்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள பந்தல் போதிய வசதிகளுடன் உள்ளதா என பார்வையிட்டார். பின்னர், ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகளை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, சப் கலெக்டர் கிராந்திகுமார்பதி, எஸ்பி அருளரசு, கூடுதல் எஸ்பி செந்தில், டிஎஸ்பி ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பொன்னுவேல், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அழகர்சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தாசில்தார் பிரகாசம் மற்றும் அரசு அலுவலர்கள், ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Collector ,Boutique ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...