உழவர் திருநாளை முன்னிட்டு திருவப்பாடியில் மாட்டுவண்டி பந்தயம்

அறந்தாங்கி, ஜன.18: உழவர் திருநாளை முன்னிட்டு அறந்தாங்கியை அடுத்த திருவப்பாடியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. அறந்தாங்கியை அடுத்த திருவப்பாடியில் உழவர் திருநாளை முன்னிட்டு 64வது ஆண்டாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு என 3 பிரிவாக நடந்த பந்தயத்தில் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகையாக ரூ.44,256ம், நடுமாடு பிரிவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.37,256ம், கரிச்சான் மாடு பிரிவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.30,256ம் வழங்கப்பட்டன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 768ம், கேடயங்களும் வழங்கப்பட்டன. பந்தயத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

× RELATED பைக் ரேஸ் விபத்து மேலும் ஒருவர் பலி