×

அரியலூர் அருகே போலீஸ் எஸ்ஐ தாக்கியதில் 3 பேருக்கு எலும்பு முறிவு போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு

அரியலூர், ஜன. 18: அரியலூர் அருகே சாலை மறியலில் ஈடுபடுகிறீர்களா என்று காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று 4 பேரை அடித்தார். அதில் 3 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. ேபாலீசார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே உள்ள காந்திநகர் உள்ளது. இந்நிலையில் அரியலூர் குமரன் நகரை சேர்ந்த 2 பேர், ஒரு பைக்கில் அரியலூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வந்தனர். அப்போது காந்திநகர் அருகே நின்று கொண்டிருந்த கணேசன் என்பவர் மீது குமரன் நகரை சேர்ந்தவர்கள் ஓட்டி வந்த ைபக் மோதியது. இதில் கணேசனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து விபத்து ஏற்படுத்திய குமரன் நகரை சேர்ந்த 2 பேரை பிடித்து கொண்டு கணேசனை மருத்துவமனையில் சேர்க்குமாறு காந்திநகரை சேர்ந்த பொதுமக்கள் கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்து தனது நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு உடனடியாக வருமாறு அழைத்தனர். இதையடுத்து பைக்குகளில் 12க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஆயுதங்களுடன் காந்திநகருக்கு வந்தனர்.இதனால் கீழப்பழுவூர் காவல் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காந்திநகர் மக்கள் தெரிவித்தனர். அப்போது பணியில் இருந்து மறுமுனையில் பேசிய போலீஸ் ஒருவர், குமரன் நகரை சேர்ந்தவர்களை நீங்களும் தாக்குங்கள், நீங்கள் தகராறு செய்து கொள்வதற்கெல்லாம் நாங்கள் வர முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து காந்திநகர் பகுதியில் விபத்து நடந்ததால் பொதுமக்கள் கூடி நின்றனர். அப்போது சம்பவ இடத்துக்கு எஸ்ஐ ஜென்கின் வந்தார். பின்னர் சாலை மறியலில் ஈடுபடுகிறீர்களா என்று கூறி காந்திநகரை சேர்ந்த வினோத், வக்கீல் முத்து, அப்பாதுரை, சிவலிங்கம் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கினார். பின்னர் அனைவரையும் விடுவித்தனர். இதில் வினோத், அப்பாதுரை, சிவலிங்கம் ஆகியோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால், அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களின் நண்பன் என்று கூறிவிட்டு குற்றவாளிகளின் கைகூலியாக செயல்படும் எஸ்ஐ ஜென்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : SI ,policemen ,Ariyalur ,
× RELATED பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிய 2 பேர் கைது