×

லாரி கவிழ்ந்து விபத்து

ஊத்தங்கரை, ஜன.18: சென்னையில் இருந்து கண்ணாடி பாரம் ஏற்றிய லாரி ஒன்று, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுக்கு புறப்பட்டது.
செங்கம் தாண்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெப்பாலம்பட்டி என்னுமிடத்தில் நேற்று காலை வந்தபோது, அங்குள்ள வளைவான பகுதியில் லாரியை திருப்ப டிரைவர் முயன்றுள்ளார். இதில், நிலைதடுமாறிய லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த கண்ணாடிகள் அனைத்தும் சுக்குநூறாக உடைந்து ரோட்டில் சிதறியது. அப்போது அந்த வழியாக வேறு வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக டிரைவர், கிளினருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியை முடுக்கி விட்டனர். மேலும், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Larry ,accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...