×

மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்து வந்து செல்லும் பாதை படுமோசம் 40 ஆண்டுகளாக தொடரும் அவலம்

மயிலாடுதுறை ஜன.18: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து பேருந்துகள் வெளிவரும் பாதை 40 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளமும் மேடும் நிறைந்த மண்பாதையாகவே உள்ளது. இந்த டெப்போவில் 80 பேருந்துகள் உள்ளன. இப்பணிமனையிலிருந்து நாள் ஒன்றுக்கு 200 நடைகளுக்குமேல் பேருந்துகள் செல்கின்றன. மயிலாடுதுறை காமராஜர் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துப்பபணி மனைக்கு செல்ல சாலையிலிருந்து 200 அடி வரை உள்ள பாதையை தாண்டிதான் சிமென்ட் தளம்கொண்ட பணிமனைவளாகம் உள்ளது, பணிமனைக்குச் செல்லும்பாதை பள்ளமும் மேடும் நிறைந்த பகுதியாக இருக்கிறது.
பணிமனையிலிருந்து பேருந்துகள் வெளியே செல்லும்போது இப்பள்ளத்தில் இறங்கி ஏறிதான் செல்லவேண்டும். பயணிகளுடன் பேருந்து டெப்போவிற்குள் சென்றால் மரண அவஸ்தையை பயணிகள் அனுபவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்பள்ளத்தை தார்சாலையாக மாற்றக்கோரி பலமுறை அரசுக்கும் போக்குவரத்துக் கழகத்திற்கும் சொல்லியும் யாரும் கண்டுகொள்வதில்லை. பேருந்து புறப்படும்போதும் மீண்டும் டெப்போவிற்குள் வரும்போதும் 30 பள்ளமேடுகளில் ஏறி இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுகுறித்து மயிலாடுதுறை செழியன் என்பவர் கூறுகையில்,’அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் அவலத்தை பார்க்க சகிக்க முடியவில்லை, இதே தனியார் பணிமனையை பாருங்கள் அவ்வளவு நேர்த்தியாக அமைத்துள்ளனர். அரசு போக்குவரத்துக் கழகம் என்றால் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வருமானம் அளிக்கும் கழகமாக இருக்கிறது. ஆனால் உழைக்கும் தொழிலாளர்களுக்கு மரண வேதனையை ஏற்படுத்தி வருகிறது, ஓட்டுனர்களின் நலன்கருதி நாகை மாவட்ட நிர்வாகமும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளும் ஒருமுறை பேருந்தில் இந்த டெப்போவிற்குள் சென்று வந்தாலே இதன் கொடுமை தெரியும். ஆகவே பேருந்து பணியாளர்களின் நலன் கருதி உடனடியாக 200 அடி நீளம் கொண்ட பாதையை சரிசெய்யவேண்டும் என்றார்.

Tags : Mayiladuthurai State Transport Board of Work ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...