×

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொளி காட்சியில் இன்று பொதுமக்கள் குறை கேட்கிறார் கலெக்டர் தகவல்

காரைக்கால், ஜன.18: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (18ம்தேதி) மாலை காணொளி மூலம் மக்கள் குறைகளை கேட்கவுள்ளதால், பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, மாவட்ட கலெக்டர் கேசவன் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் கேசவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தினசரி மாலை 5 முதல் 6 மணி வரை புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். அதேபோல், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5  முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. இன்று (18ம்தேதி) இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர்,  வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில், புகார்களை எழுத்து வடிவில் கொண்டுவந்து முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Puducherry ,Deputy Assistant Governor ,collector ,public ,
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்