×

லளிகம் மற்றும் நார்த்தம்பட்டியில் எருதாட்டம்

தர்மபுரி, ஜன.18: தர்மபுரி அருகே லளிகம் மற்றும் நார்த்தம்பட்டியில் நேற்று மாலை எருதாட்டம் கோலாகலமாக நடந்தது.லளிகம் மற்றும் நார்த்தம்பட்டி பகுதிகளில், கரி நாளையொட்டி நேற்று எருதாட்டம் நடந்தது. இதையொட்டி லளிகம் கிராமத்தில் தீர்த்தம் தெளிக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. நேற்று பகல் 2 மணியளவில் நார்த்தம்பட்டியில் உள்ள 2 எருதுகளுக்கு அலங்காரம் செய்து, லளிகத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. பின்னர் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஊர் பிரமுகர்கள் முன்னிலையில், சிறப்பு பூஜை, தீர்த்தம் தெளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 3 மணிக்கு பாரம்பரிய எருதாட்டம் நடந்தது. இளைஞர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் எருதாட்ட நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அதியமான் கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 இதே போல், நேற்று மாலை லளிகம் கிராமத்தில் பாரம்பரிய எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளாமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கடகத்தூர் பகுதியிலும் எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மக்கள் கூட்டம் திரண்டதால், தர்மபுரி டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பென்னாகரம்: பென்னாகரம் வட்டம் கூத்தாடி ஒகேனக்கல் பஞ்சாயத்துக்குட்பட்ட கே. அக்ரஹாரம் கிராமத்தில் பொங்கலை முன்னிட்டு எருதாட்ட விழா நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. மடம், அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்கள் சார்பில் காளைகள் கலந்து கொண்டன. எருதாட்டத்தை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் பலர் போட்டி போட்டு அடக்கினர்.  





Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா