×

உரிமமின்றி உணவு வணிகம் செய்தால் கடும் நடவடிக்கை

தர்மபுரி, ஜன.18: உரிமமின்றி உணவு வணிகத்தில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உரிமமின்றி உணவு வணிகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: தர்மபுரி மாவட்டம் முழுவதும், ஓட்டல்கள், மளிகை, பேக்கரி, இறைச்சி, டீக்கடைகள், பால் வியாபாரிகள், சாலையோர உணவு வியாபாரிகள், உணவுப்பொருட்களின் மொத்த விற்பனையாளர்கள் அனைவரும், உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006ன் கீழ் உரிமம் பெறவேண்டியது அவசியம். மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வணிகர்கள் மட்டுமின்றி, அன்னதானம் செய்வோரும், உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறவேண்டும். உணவு பாதுகாப்புத்துறையின் உரிமத்தினை, 5 ஆண்டுகள் வரை, அதற்குரிய கட்டணம் செலுத்தி பெறலாம். உரிமம் காலாவதியாவதற்கு, 30 நாட்களுக்கு முன், அதை புதுப்பிக்க வேண்டும். தவறினால், நாளொன்றுக்கு, 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். www.fssai.gov.in  என்ற இணையதளத்தில், உரிமம் விண்ணப்பிக்க, புதுப்பிக்க, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 9443158399 என்ற எண்ணிலோ, 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா