×

பொங்கலையொட்டி 5.75 கோடிக்கு மது விற்பனை

தர்மபுரி, ஜன.18:  தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ₹5.75 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. தர்மபுரி நகரில் 6 டாஸ்மாக் கடைகள், கிராமப்புறங்களில் 46 டாஸ்மாக் கடைகள் என மொத்தம் 52 கடைகள் உள்ளன. இதில் ஒருசில கடைகளில் பார்கள் இணைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 52 டாஸ்மாக் கடைகளில் தினந்தோறும் சராசரியாக ₹1.30 கோடி முதல் ₹1.40 கோடி வரை மது விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15ம் தேதி மற்றும் 17ம் தேதி ஆகிய 2 நாட்களில் ₹5.75 கோடிக்கு பீர் மற்றும் பிராந்தி, ரம் விற்பனையாகியுள்ளது. அனைத்து கடைகளிலும் மதுவிற்பனை அமோகமாக நடந்தது. மாவட்டத்தில் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி மற்றும் சினிமா தியேட்டர்களை ஒட்டியுள்ள கடைகளில் குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி சென்றனர். பொங்கல் பண்டிகை நாட்களில் 4700 பீர் பெட்டிகளும், 4300 பெட்டிகள் மதுபானங்களும் விற்பனை ஆகியுள்ளன. பொங்கல் தினத்தன்று மட்டும் ₹3 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. நேற்று சுமார் ₹2.75 கோடி என 2 நாட்களில் மட்டும் ₹5.75 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.



Tags : Alcohol sale ,
× RELATED 24 மணிநேரமும் மது விற்பனை ஜோர்