×

கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் கழிவு நீரால் சுகாதாரக் கேடு

கரூர், ஜன.18: கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் பல சந்துக்கள் உள்ளன. இந்த சந்துபகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் கலந்துவிடுகின்றன.வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும்சாலையில் வருகிறது.லேசான மழைபெய்தால் கூட சாலையில் கழிவுநீர் தேங்கிவிடுகிறது. பிரம்மதீர்த்தம் சாலை பகுதியில் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur Brahmastiram Road ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு