×

பிறந்த நாள் விழா கரூரில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக மாலை அணிவிப்பு

கரூர், ஜன. 18: எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி கரூர் வெங்கமேட்டில் உள்ள எம்ஜிஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று மாலை அணிவிக்கப்பட்டது. அவைத்தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதேபோல் நகரின் பல்வேறு பகுதியிலும் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : birthday ,Karur ,idol ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...