×

மாவட்டம் முழுவதும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தர்மபுரி, ஜன.18: தர்மபுரி மாவட்டம் முழுவதும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான  எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அவைத்தலைவர் தொமு நாகராஜன் தலைமையில், அதிமுகவினர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், நகர செயலாளர் குருநாதன், முன்னாள் நகர செயலாளர்கள் எஸ்ஆர் வெற்றிவேல், ரவி, முன்னாள் நகர துணை செயலாளர் பூக்கடை ரவி, கோவிந்தசாமி, பழனிசாமி, செந்தில்குமார், விஜயன், அங்குராஜ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். அன்னசாகரத்தில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல் தலைமையில், அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் நகர மன்ற துணை தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தர்மபுரி மாவட்ட அமமுக சார்பில், பழைய தர்மபுரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், ராஜாபேட்டை, மதிகோன்பாளையம் காமாட்சியம்மன் கோயில் தெருவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, டிகே ராஜேந்திரன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், நகர செயலாளர் மணிவண்ணன், மாநில தகவல் தொழில்நுட்பப்பிரிவு பாலு, ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் சம்பத், ராஜா, குமரேசன், ராமன், வேலாயுதம், ராதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காரிமங்கலம்:காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டியில், அதிமுக ஒன்றிய மாணவர் அணி செயலாளரும், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநருமான ரவிசங்கர்,  எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் பழனி, சுப்பிரமணி, மாது, கணபதி, முன்னாள் கவுன்சிலர்கள் குமரவேல், சின்னசாமி, நிர்வாகிகள் குப்பன், ஜெயராமன், சக்திவேல்,  தனபால், பெரியண்ணன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். காரிமங்கலத்தில் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் ராமசாமி கோயில் மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலையிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காவேரி, ஜிம் முருகன், போக்குவரத்து மண்டலத் தலைவர் சிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொம்மிடி, கடத்தூர், மெணசியில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பெரியக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags : MGR Anniversary Celebration ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...