×

திருப்புத்தூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, ஜன.18: திருப்பத்தூரில் மின் பயனீட்டாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்க உள்ளது.சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் சின்னையன் தெரிவித்ததாவது: திருப்பத்தூரில் ஜனவரி மாதத்திற்கான மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Tirupathur ,
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்